திங்கள், மார்ச் 10, 2014

யாரோ இவன் யாரோ - உதயம் NH4


யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்

யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்

உன் காதலில் கரைகின்றவன்
உன் பார்வையில் உறைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்

என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெயிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்

எங்கே உன்னை கூட்டி செல்ல
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல

என் பெண்மையும் இளைப்பாறவே
உன் மார்பிலே இடம் போதுமே

ஏன் இன்று இடைவெளி குறைகிறதே

மெதுவாக இதயங்கள் இணைகிறதே

உன் கை விரல் என் கை விரல் கேட்கின்றதே

யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்

உன் சுவாசங்கள் எனை தீண்டினால்
என் நாணங்கள் ஏன் தோற்குதோ

உன் வாசனை வரும் வேளையில்
என் யோசனை ஏன் மாறுதோ

நதியினில் ஒரு இலை விழுகிறதே

அலைகளில் மிதந்து அது தவழ்கிறதே
கரை சேருமா கை சேருமா எதிர்காலமே

எனக்காவே பிறந்தான் இவன்
எனை காக்கவே வருவான் இவன்
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்
என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெய்யிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்

Bookmark and Share

பிரபலமான இடுகைகள்

பாடல்கள் பற்றி அறிய - Live Chat